Skip to main content

8 மாதங்கள் கழித்து ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு...

Published on 02/12/2020 | Edited on 02/12/2020

 

College opens for research students after 8 months ...

 

 

தமிழகத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது கல்லூரிகள் மட்டும் எட்டு மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. 

 

மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த போதிலும், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் முடிக்கப்பட்டு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டுவந்தன.

 

இந்நிலையில் ஆராய்ச்சி மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு 2ஆம் ஆண்டு மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வியை கருத்தில்கொண்டு அவர்களுக்கு மட்டும் இன்று முதல் நேரடி வகுப்பு நடத்த அரசு அனுமதித்துள்ளது.

 

அதன் அடிப்படையில் இன்று முதல் கட்டமாக ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி திறக்கப்பட்டு, கரோனா தடுப்பு விதிமுறைகளோடு வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதேபோல் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் வருகின்ற 7ஆம் தேதி முதல் கல்லூரி தொடங்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு வருகின்ற மாணவர்கள் தனிநபர் இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கடைபிக்கவேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
chennai mit college issue

சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. (M.I.T.) என்ற பெயரில் பிரபல பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கல்லூரிக்கு இன்று (06.03.2024) மாலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை காவல்துறையின் சார்பில் மோப்ப நாயை கொண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாகச் சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், இன்று காலை சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வெடிக்கும் என பெங்களூரு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

மர்மமான முறையில் மாணவர் மரணம்; விசாரணை நடத்த போலீஸார் தயக்கம்?

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Police reluctant to investigate student passed away in Vellore

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ளது கார்க்கூர் கிராமம். இங்கு  இயங்கி வரும் பாலாறு வேளாண்மை கல்லூரியில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கிரிஷின் நகரை சேர்ந்த ரவி எலக்ட்ரிஷியன் என்பவர் இளைய மகன் பிரதாப் (18) என்பவர் முதலாமாண்டு  படிக்கிறார். கல்லூரி ஹாஸ்டலில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த 10-ந் தேதி அரக்கோணம் சென்று தனது வீட்டில்  பெற்றோரை பார்த்து விட்டு மீண்டும் பிப்-12ஆம் தேதி திங்கள் கிழமையன்று கல்லூரிக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிப்ரவரி 17 ஆம் தேதி காலை சுமார் 6.00 மணியளவில் கல்லூரி ஹாஸ்டல் வார்டனிடம் ஜெராக்ஸ் எடுக்க அருகிலுள்ள மேல்பட்டி கிராமத்திற்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் காலை 7.00 மணியளவில் மேல்பட்டி ரயில் நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் காட்பாடி செல்லும் ரயில் மார்க்கம் பகுதியில் இருப்பு பாதையில் மாணவன் பிரதாப் தலை மற்றும் முகத்தில் படுகாயத்துடன் மயங்கி கிடந்ததை பார்த்த ரயில்வே பணியாளர்கள் மேல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக  மேல் பட்டி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயத்துடன் கிடந்த மாணவன் பிரதாப்பை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். 

அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று உயிரழந்தார். பாலாறு வேளாண்மைக் கல்லூரி, முன்னாள் அமைச்சர் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளருமான கே.சி வீரமணிக்குச் சொந்தமானது. இந்த கல்லூரி மாணவர்தான் இறந்துள்ளார், இது கொலையா? தற்கொலையா என தீவிரமாக விசாரணை நடத்த வேண்டிய போலீசார் இதில் மெத்தனமாக விசாரணை நடத்துகின்றனர். இது முன்னாள் அமைச்சரின் கல்லூரி என்பதால் அதற்கு எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படி நடப்பதாக இறந்த மாணவனின் பெற்றோரும், உறவினர்களும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.