Advertisment

மாணவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட கல்லூரி விரிவுரையாளர்!

college lecturer who falls in love with student and married her

நாமக்கல்லில் கல்லூரி மாணவனைஅதே கல்லூரியில் பணியாற்றிய விரிவுரையாளர் திருமணம் செய்துள்ளார்.

Advertisment

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மீனா என்ற பெண் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் அதே கல்லூரியில் இளங்கலைப் படித்து வந்த மாணவர் பிரவீன் என்பவரைக்காதலித்து வந்துள்ளார். இருவரின் காதலை அறிந்ததும் கல்லூரி நிர்வாகம் இருவரது பெற்றோர்களையும் நேரில் அழைத்துஇருவரையும் கண்டித்துள்ளனர். ஆனால் இதனை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறி மீனா - பிரவீன் ஜோடி வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதனையடுத்து போலீசார் இருவரின் பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திஇறுதியில் விரிவுரையாளர் மீனாவை மாணவர் பிரவீனுடன் அனுப்பி வைத்தனர்.

Lecturer student college namakkal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe