கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஏ.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி, விவசாயி. இவரது மகள் பிரேமா (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.

Advertisment

இவரும் அதே ஊரைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் சின்னமணி (28) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். ஆசிரியை பிரேமாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சின்னமணி அவருக்கு சொந்தமான முந்திரி தோப்பில் தொடர்ச்சியாக பலமுறை வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதற்கிடையில் தற்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரேமா கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னமணி, அவரது தந்தை கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் ரவிச்சந்திரன் ஜெயக்குமாரி, முத்துலட்சுமி ஆகியோர் பிரேமாவை தலை முடியை பிடித்து இழுத்து தள்ளி அடித்து தாக்கியுள்ளனர்.

Advertisment

இது பற்றி பிரேமா கொடுத்த புகாரின் பேரில், பண்ருட்டி அனைத்து மகளீர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்கு பதிவு செய்து, கல்லூரி பேராசிரியர் சின்னமணியை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். நீதிபதி கணேஷ் இவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பேராசிரியர் சின்னமணி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.