Advertisment

கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை; கஞ்சா இளைஞர் கைது

College girl strangled to incident; Ganja youth arrested

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தறுக்கப்பட்டுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ளராதாபுரம்கிராமத்தைச் சேர்ந்தவர் சுகன். இவரது19 வயதுமகள் தரணி. அவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்திருந்த அவர்வீட்டுத்தோட்டத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்குமறைந்திருந்த வாலிபர் ஒருவர் தரணியின்கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார்.

Advertisment

தரணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது அங்கு ரத்த வெள்ளத்தில் தரணி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தரணியின் உடலைக் கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் தரணியை கொலை செய்த இளைஞரை பிடிக்க போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கணேஷ் என்ற 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கணேஷ் என்ற அந்த இளைஞரை தரணி காதலித்ததுதெரிய வந்தது. கணேஷ் கஞ்சாவிற்கு அடிமையானவன் என்பதை காலப்போக்கில் தெரிந்துகொண்ட தரணி அவரிடம் பழகுவதை குறைத்துக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் அவரது தோட்டத்திற்கு சென்று தனிமையில் இருந்த தரணியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. கஞ்சா போதையில் இருந்தஇளைஞர் மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் விக்கிரவாண்டியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

incident Viluppuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe