Advertisment

கல்லூரி மாணவி தற்கொலை! காதல் விவகாரம்தான் காரணமா? 

College Girl passes away near trichy

Advertisment

திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த சாக்கு தைக்கும் தொழிலாளி சீனிவாசன். இவருடைய மகள் சங்கீதா. இவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 3ஆம் ஆண்டு படித்துவந்தார்.கடந்த சில நாட்களாகவே சங்கீதா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் (03.10.2021) இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து தில்லைநகர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இதற்கிடையே, சங்கீதாவை காதலித்துவந்த பாலக்கரை எடத்தெருவைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் அவரை திருமணம் செய்ய மறுத்ததாகவும், இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினார்கள்.இதையடுத்து சங்கீதாவை தற்கொலைக்குத் தூண்டியதாக சரவணக்குமார், அவரது தந்தை மூர்த்தி மற்றும் 3 பேர் உள்பட மொத்தம் 5 பேர் மீது தில்லைநகர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

college girl trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe