
திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியை சேர்ந்தவர் அவந்திகா(19). அவினாசி கங்கவர் நகரைச் சேர்ந்தவர் மோனிகா(19). இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளனர். இருவரும் ஒரு பாடப்பிரிவு என்பதால், நல்ல நண்பர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் தங்களில் படிப்பு செலவுக்காக இருவரும் கல்லூரி சென்ற திரும்பிய பிறகு அந்த பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பகுதி நேரமாக வேலையும் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அவந்திகாவின் பெற்றோர் வேலைக்கு சென்றதால், வீட்டில் அவரும் மட்டும் தனியாக இருந்துள்ளார். அந்த நேரத்தில் அவரது தோழி மோனிகாவும் அவந்திகாவின் வீட்டிற்கு வந்துள்ளனர். வேலைக்கு சென்ற பெற்றோர் மாலையில் வீடு திரும்பிய போது, வீட்டில் உள்ள ஒரு அறையில் அவந்திகாவும், மோனிகாவும் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் இருவரும் தற்கொலை செய்துகொண்டனர் என்றும், ஆனால் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.