First College First Year Classes Today!

Advertisment

தமிழ்நாட்டில் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று (04/10/2021) முதல் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன. இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டைப் போல, முதலாம் ஆண்டுக்கும் ஒருநாள் விட்டு ஒருநாள் என வாரத்தில் இரண்டு நாள் வகுப்புகள் நடக்கும். கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கை நிறைவடைந்ததால் வகுப்புகள் தொடங்குகின்றன. புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்குப் புத்தொளிப் பயிற்சி வழங்க கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தகுதி வாய்ந்த அனைத்து மாணவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதிசெய்ய ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகளை நடத்த கல்லூரி நிர்வாகங்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.