கல்லூரி தாளாளர் தற்கொலை!

college

கல்லூரிதாளாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அபுதாகீர். 43 வயதான இவர், நர்சிங் கல்லூரியில் தாளாளராக இருந்து அதை நிர்வகித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அபுதாகீர் சொக்கம்பட்டி அருகே உள்ள கருப்பாநதி அணை அருகே வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி வந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அபுதாகீர் பரிதாபமாக இறந்தார்.

அவர் குடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்தாரா அல்லது நர்சிங் கல்லூரியில் உள்ள பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்தாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்று பல்வேறு கோணங்களில் சொக்கம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

college Correspondent
இதையும் படியுங்கள்
Subscribe