College bus - school van head-on collision accident! 10 people were injured

Advertisment

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள கூத்தூரில் செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து 50 மாணவர்களுடன் ஸ்ரீரங்கத்தில் இருந்து கூத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை கண்ணன் என்பவர் ஓட்டி வந்தார். பேருந்து ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பாலத்தில் இறங்கும்போது அதன் வேகம் அதிகமாக இருந்துள்ளது.

பேருந்து, ஓட்டுநர் கண்ணனின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. மேலும், எதிரே வந்த மற்றொரு தனியார் பள்ளி வேன் மீதும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 மாணவி, ஒரு மாணவன் மற்றும் பொதுமக்கள் என 10க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பிரதான சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், வயது முதிர்வு காரணமாக ஓட்டுநர் கண்ணனால் பேருந்து ஓட்டத்தை கட்டுப்படுத்த இயலவில்லை என தெரிய வந்திருக்கிறது