Advertisment

கட்டுப்பாட்டை இழந்த கல்லூரிப் பேருந்து; பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

A college bus lost control; CCTV footage

நாகப்பட்டினத்தில் வேகமாக வந்த தனியார் கல்லூரிப் பேருந்து நிலை தடுமாறி எதிர்ப்புறத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது மோதிவிட்டுச் செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரில் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பஞ்சநதி குளத்தில் இருந்து பாப்பாகோயில் பகுதிக்குச் சென்ற தனியார் கல்லூரிப் பேருந்து திடீரென நிலை தடுமாறியது. தூக்கக் கலக்கத்தில் கல்லூரிப் பேருந்து ஓட்டுநர் வலது புறத்தில் பேருந்தை செலுத்திய நிலையில் எதிர்புறத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது மோதி, இரு சக்கர வாகனம் புதரில் தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாரியப்பன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

Nagapattinam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe