ஸ்ரீபெரும்புதூரில்இருந்து எண்ணூர் நோக்கி சென்று கொண்டிருந்ததனியார் கல்லூரி பேருந்து தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபொழுது கோவூர் என்ற இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. எபினேஷ்என்பவர் வாகனத்தை இயங்கி வந்த நிலையில் அந்த பேருந்தில் மொத்தம் 35 மாணவர்கள் பயணித்ததாக சொல்லப்படுகிறது. அப்பொழுது பேருந்து தீப்பிடித்ததை தொடர்ந்து ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு மாணவர்களை கீழே இறங்க வைத்துள்ளார். இந்த விபத்தில் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிப்பதற்குள்பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு கரும்புகை சூழ்ந்ததால் பதற்றம் நிலவியதோடுபோக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
தாம்பரத்தில் நடு சாலையில் கல்லூரி பேருந்து எரிந்து விபத்து!
Advertisment