Advertisment

கல்லூரி பேருந்து கார் மோதல் - மூன்று பேர் பலி

College bus car collision! Three passed away

Advertisment

திருச்சி ஸ்ரீரங்கம் கீழக்கரை தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் (44) அவரது மனைவி ராஜேஸ்வரி(37) மற்றும் பெரியக்கா(65) ஆகியோர் காரில் குடும்பத்துடன் தென்காசியில்உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர். சாமி கும்பிட்டு விட்டு திரும்பும் வழியில் ராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே முத்துக்குமார், ராஜேஸ்வரி மற்றும் பெரியக்கா ஆகியோர் உயிரிழந்தனர். கல்லூரி பேருந்தில் பயணம் செய்த 8 மாணவிகள் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe