Advertisment

ரத்தான கல்லூரி கலை நிகழ்ச்சி; மொட்டை மாடியில் அமர்ந்து மாணவர்கள் போராட்டம்

 college art show canclelled students protest by sitting on the terrace

சென்னை ராயப்பேட்டையில் உள்ள 'நியூ காலேஜ்' கல்லூரி நிர்வாகம் கலை நிகழ்ச்சிகள் நடத்த மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

ஆண்டுதோறும்சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ காலேஜ் கல்லூரியில் ஆண்டு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் திட்டமிட்டபடி வழக்கம்போல் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று கல்லூரி நிர்வாகம் கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நியூ காலேஜ் மாணவர்கள் மொட்டை மாடி பகுதியில் அமர்ந்து கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் மாணவர் ஒருவர் ஆபத்து உணராமல் மொட்டை மாடியில் ஆபத்தான பகுதியில் அமர்ந்து போராட்டம் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Advertisment
Culture Dance
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe