Collector's Office near Vriddhachalam to arrest the  mineral resources!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடி பகுதியிலுள்ள பாக்கொல்லை, நடியப்பட்டு, இருளக்குறிச்சி பகுதிகளில் தொடர்ந்து கூழாங்கற்கள் மற்றும் செம்மண் கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் கடத்தலில் ஈடுபடுகிற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

அதன் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, செப்டம்பர் 19-09-2020 அன்று இருளக்குறிச்சி ஊராட்சியில், சார் ஆட்சியர் பிரவீன் குமார், பட்டப்பகலில் செம்மண் கடத்தல் கும்பல் பயன்படுத்திய டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி இயந்திரத்தைப் பறிமுதல் செய்துள்ளார். ஆனால், இதுநாள் வரை அந்த வாகன உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்யவில்லை என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கையூட்டுப் பெற்றுக் கொண்டதாகவும், குற்றவாளிக்குச் சாதகமாக வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்துவதாகவும் கூறி விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர்.

Advertisment

அப்போது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த விருத்தாசலம் காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டனர். அதில் இருதரப்புக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றி,தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.