Collector will inform about the permission of the devotees

Advertisment

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வருகிற 14ஆம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படும். இந்நிலையில், கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கூறுகையில், “கோவிலைச் சுற்றி 117 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. உத்திர வீதிகளில் 90 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கேமராக்கள் மூலம் கோயில் புறக்காவல் நிலையத்திலிருந்து போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர்.

கோவிலில் மூன்று முக்கிய இடங்களில் ஸ்பீட் டூம் கேமரா வைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களைப் பதிவுசெய்யும் விதமாக இந்த ஆண்டு கோயில் நிர்வாகம் சார்பில் ஏஎன்டிஆர்என் என்ற கேமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக முப்பத்திரண்டு இடங்களில் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

17 ரோந்து காவலர்கள் வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் கோயிலில் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுத்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறார்கள். பக்தர்கள் எப்போதும்போல் விழாக் காலங்களில் கோவிலில் தரிசனம் செய்யலாம். நிற்காமல் செல்ல வேண்டும். மேலும், சொர்க்க வாசல் திறப்பு அன்று பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிப்பார்” என்று கூறினார்.