தமிழகத்தில் முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை இன்று காலை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் சிவராசு முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கான கரோனா தடுப்பூசி மூன்றாவது தவணை செலுத்தும் பணியைத் துவங்கி வைத்தார்.