ADVERTISEMENT

நடமாடும் நெல் கொள்முதல் வாகனத்தைத் தொடங்கி வைத்த ஆட்சியர்!

09:36 PM Jan 23, 2024 | prabukumar@nak…

ADVERTISEMENT

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் கடலூர் மண்டலத்தில் கடந்த 2022- 2023 ஆம் ஆண்டின் பருவத்தில் 258 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு 2 லட்சத்து 44 ஆயிரத்து 62.600 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 31 ஆயிரத்து 950 விவசாயிகள் பயன் அடைந்தார்கள். மேலும் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்டங்களில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டு 600.280 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஆண்டு 2023-2024 ஆம் பருவத்திற்கு தொடக்கமாக கடலூர் மாவட்டத்தில் வட்டம் வாரியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோயிலில் - 34, ஸ்ரீமுஷ்ணத்தில் - 35, விருத்தாசலத்தில் - 24, சிதம்பரத்தில் - 9, திட்டக்குடியில் - 15, புவனகிரியில் - 7, குறிஞ்சிப்பாடியில் - 6, வேப்பூரில்- 12, கடலூரில் - 7, பண்ருட்டியில் - 4 ஆக மொத்தம் 153 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகள் அறுவடை பகுதிக்கு சென்று 22ம் தேதி முதல் விருத்தாசலம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் திறந்துவைக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் சன்னா ரகம் (ஏ கிரேட்) குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2 ஆயிரத்து 310, பொதுரகம் (காமன்) குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2 ஆயிரத்து 265 -ம் தரப்படுகிறது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (22.01.2024) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாக கே.எம்.எஸ் 2023-24 ஆம் பருவத்திற்கான நடமாடும் நெல் கொள்முதல் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகதீஸ்வரன், வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்(விவசாயம்) இரவிச்சந்திரன், நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் குமரவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT