Advertisment

பிடிகாசு வாங்க 7 பேர் நசுங்கி உயிரிழந்த கோவிலுக்கு சீல் வைத்த கலெக்டர்!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்பசாமிகோவிலில் கடந்த மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்ற திருவிழா பவுர்ணமியை முன்னிட்டு பிடிகாசு வழங்கும் விழா நடைபெற்றது.

Advertisment

A collector sealed to a temple that was crushed incident

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சியை சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றதால் கூட்ட நெரிசலில் 4 பெண்கள் 3 ஆண்கள் உள்ளிட்ட 7 பேர் சிக்கி நசுங்கி பேர் உயிரிழந்தனர் - 11 பேர் காயமடைந்தனர்.

Advertisment

A collector sealed to a temple that was crushed incident

இது தனியாருக்கு சொந்தமான கோவில் என்பதால் இச்சம்பவத்தை தொடர்ந்து இக்கோவிலின் உரிமையாளர் பூசாரி தனபால் கைது செய்யப்பட்டார் - சிக்கி இறந்து போனவர்களுக்கு பிரதமர் நிவாராண தொகை வழங்கினார்.

இந்த நிலையில் அரசு அனுமதியின்றியும், அறநிலையத்துறையினரிடம் அனுமதி பெறாமலும் கட்டப்பட்டு உள்ளதால் மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில் கோயில் மூடபட்டு சீல்வைக்கப்பட்டது.

sealed temple thiruchy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe