Collector orders closure of liquor shops in Trichy for two days ..!

திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்தையும் இரண்டு நாட்கள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 25ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் ஆகியவை கொண்டாடப்படுவதையொட்டி, இந்த இரண்டு தினங்களில் திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் மற்றும் மதுபானம் அருந்துவதற்காக பயன்படுத்தக்கூடிய பார்கள், விடுதிகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த உத்தரவை மீறி மதுபான கடைகளையும் பார்களையும் திறந்து வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Advertisment