Advertisment

நா.த.க. பணிகளில் ஈடுபட்ட வட்டாட்சியர்; ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Collector  order thahsildar involved in the NtK party work

நா.த.க. சார்ந்த பணியில் ஈடுபட்ட வட்டாட்சியர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Advertisment

திருநெல்வேலி மாவட்டத்தில் நில எடுப்பு பிரிவு தனி வட்டாட்சியராக பணிபுரிந்து வருபவர் செல்வக்குமார். இவர் நாம் தமிழர் கட்சியிலும் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் நா.த.க. நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகப் புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகின. இதனையடுத்து இவர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.இந்நிலையில், செல்வக்குமார் நில எடுப்பு வட்டாட்சியர் பணியில் இருந்து விடுக்கப்பட்டுள்ளார்.

Advertisment

அதோடு அவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். மேலும் செல்வகுமார் நா.த.க. கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது குறித்த புகார் தொடர்பாக அவரிடம் எழுத்துப்பூர்வமாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது. இது தொடர்பாக அவர் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு அரசு அதிகாரி அரசியல் கட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என்ற சட்ட விதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tirunelveli tahsildar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe