Advertisment

ஆபீசர்ஸ் கிளப்பில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட ஆட்சியர்

Collector Involved in Action Trial at Officers Club!

கரூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் ஆபீசர்ஸ் கிளப்பில் சட்டத்திற்குப் புறம்பாக சூதாட்டம் நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், அங்கு அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டார்.இந்த அதிரடி சோதனைக் குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கூறுகையில், “மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கிளப்பை ஒரு சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பயன்படுத்தி வரும் நிலையில், இந்த இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகக்கொண்டுவர அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது இந்த கிளப் சார்பில் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையானது ரூ. 93 லட்சம். இது அப்படியே கிடப்பில் உள்ளது. எனவே கிளப்பிடமிருந்து விரைவில் இந்த 93 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு அரசிடம் கொண்டு சேர்க்கப்படும்” என்று தெரிவித்தார்.

Advertisment

karur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe