Advertisment

கலெக்டரின் பேட்டி... பெருகும் வரவேற்பு!

Nagercoil- collector - interview

Advertisment

சில தினங்களுக்கு முன் வெளியான அகில இந்தியசிவில் சா்வீசஸ் தோ்வு முடிவுகளில் தமிழகமாணவ மாணவிகளில் பலா் சாதனை புரிந்துள்ளனர். இதில் மதுரையைச் சோ்ந்த பூா்ணசுந்தாி எனும் கண்பாா்வையற்ற மாணவி தன்னுடைய நான்காவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளாா். நாகா்கோவிலைச் சோ்ந்த கணேஷ்குமாா் தன்னுடைய இரண்டாவது முயற்சியில் தேசிய அளவில் 7 ஆவது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்துச் சாதித்துள்ளாா்.

இந்த நிலையில் கணேஷ்குமாரை தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்துகள் சொன்ன நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித், 2015-இல் சிவில் சா்வீசஸ் தோ்வில் தேசிய அளவில் 40 ஆவது இடத்தைப் பிடித்தவர்.ஆஷா அஜித் ஏற்கனவே கேரளா அரசின் கல்வி தொலைக்காட்சியில் மாணவா்களுக்கு ஐ.ஏ.எஸ். தோ்வில் வெற்றி பெறுவது தொடா்பாக வகுப்புகள் எடுத்து இருக்கிறாா். மேலும் பல ஐ.ஏ.எஸ். தோ்வாளா்களிடம் சாதிக்க விரும்பும் மாணவா்களுக்கு உதவும் வகையில்பல பேட்டிகளையும் எடுத்துள்ளாா்.

இந்த நிலையில் தான் கணேஷ்குமாா் ஐ.ஏ.எஸ். தோ்வில் சாதித்ததும், மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித் அவரை மாநகராட்சி அலுவலகத்துக்கு நோில் அழைத்து பேட்டி எடுத்து, அந்தப் பேட்டியை மாணவா்களும் பெற்றோா்களும் பாா்க்கும் விதமாக மாநகராட்சி முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். இதில் கணேஷ்குமாாின் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும்,இனிவரும் தேர்வுகளுக்கு தயாராவது பற்றிஎழுப்பப்பட்ட மாநகராட்சி ஆணையாின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித் கூறும் போது... "அடுத்த சிவில் சா்வீசஸ் தோ்வு அக்டோபா் மாதம் நடக்க இருக்கிறது. அந்தத்தோ்வில் கலந்து கொள்ள இருக்கும் மாணவா்கள் தற்போது பரவிக்கொண்டு இருக்கும் கரோனாவால் பயிற்சி மையத்துக்குச் செல்ல முடியாமல் வீட்டில்தயாராகிக் கொண்டிருக்கிறாா்கள்.அவா்களுக்கு இந்தப் பதிவு பயன் உள்ளதாக இருக்கும் மேலும் அக்டோபா் மாதம் சிவில் சா்வீசஸ் தோ்வில் கலந்து கொள்ள இருக்கும் குமாி மாவட்ட மாணவா்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீா்க்க தன்னை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

மாநகராட்சி ஆணையாின் இந்த முயற்சிக்கு பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ளது. தற்போது குமாி மாவட்டம் பத்மநாபபுரம் உதவி ஆட்சியராக இருக்கும் சரண்யா அறி 2015 சிவில் சா்வீசஸ் தோ்வில் தேசிய அளவில் 2 ஆவது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

interview District Collector Nagercoil
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe