Skip to main content

கலெக்டரின் பேட்டி... பெருகும் வரவேற்பு!

Published on 10/08/2020 | Edited on 10/08/2020

 

Nagercoil- collector - interview

 

சில தினங்களுக்கு முன் வெளியான அகில இந்திய சிவில் சா்வீசஸ் தோ்வு முடிவுகளில் தமிழக மாணவ மாணவிகளில் பலா் சாதனை புரிந்துள்ளனர். இதில் மதுரையைச் சோ்ந்த பூா்ணசுந்தாி எனும் கண்பாா்வையற்ற மாணவி தன்னுடைய நான்காவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளாா். நாகா்கோவிலைச் சோ்ந்த கணேஷ்குமாா் தன்னுடைய இரண்டாவது முயற்சியில் தேசிய அளவில் 7 ஆவது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்துச் சாதித்துள்ளாா்.

 

இந்த நிலையில் கணேஷ்குமாரை தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்துகள் சொன்ன நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித், 2015-இல் சிவில் சா்வீசஸ் தோ்வில் தேசிய அளவில் 40 ஆவது இடத்தைப் பிடித்தவர். ஆஷா அஜித் ஏற்கனவே கேரளா அரசின் கல்வி தொலைக்காட்சியில் மாணவா்களுக்கு ஐ.ஏ.எஸ். தோ்வில் வெற்றி பெறுவது தொடா்பாக வகுப்புகள் எடுத்து இருக்கிறாா். மேலும் பல ஐ.ஏ.எஸ். தோ்வாளா்களிடம் சாதிக்க விரும்பும் மாணவா்களுக்கு உதவும் வகையில் பல பேட்டிகளையும் எடுத்துள்ளாா்.

 

இந்த நிலையில் தான் கணேஷ்குமாா் ஐ.ஏ.எஸ். தோ்வில் சாதித்ததும், மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித் அவரை மாநகராட்சி அலுவலகத்துக்கு நோில் அழைத்து பேட்டி எடுத்து, அந்தப் பேட்டியை மாணவா்களும் பெற்றோா்களும் பாா்க்கும் விதமாக மாநகராட்சி முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். இதில் கணேஷ்குமாாின் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும், இனிவரும் தேர்வுகளுக்கு தயாராவது பற்றி எழுப்பப்பட்ட மாநகராட்சி ஆணையாின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

 

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித் கூறும் போது... "அடுத்த சிவில் சா்வீசஸ் தோ்வு அக்டோபா் மாதம் நடக்க இருக்கிறது. அந்தத் தோ்வில் கலந்து கொள்ள இருக்கும் மாணவா்கள் தற்போது பரவிக்கொண்டு இருக்கும் கரோனாவால் பயிற்சி மையத்துக்குச் செல்ல முடியாமல் வீட்டில் தயாராகிக் கொண்டிருக்கிறாா்கள். அவா்களுக்கு இந்தப் பதிவு பயன் உள்ளதாக இருக்கும் மேலும் அக்டோபா் மாதம் சிவில் சா்வீசஸ் தோ்வில் கலந்து கொள்ள இருக்கும் குமாி மாவட்ட மாணவா்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீா்க்க தன்னை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.   

 

மாநகராட்சி ஆணையாின் இந்த முயற்சிக்கு பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ளது. தற்போது குமாி மாவட்டம் பத்மநாபபுரம் உதவி ஆட்சியராக இருக்கும் சரண்யா அறி 2015 சிவில் சா்வீசஸ் தோ்வில் தேசிய அளவில் 2 ஆவது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.

Next Story

ஆய்வில் விசித்திரம் காட்டிய மாவட்ட ஆட்சியர் !

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
The collector Research pretending to be a patient in uttarpradesh

உத்தரப்பிரதேச மாநிலம், பிரோஸ்பூர் பகுதியில் அரசு சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் அங்குள்ள பணியாளர்கள், வரும் நோயாளிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.

இந்த தொடர் புகாரின் காரணமாக, மாவட்ட ஆட்சியர் கிருதி ராஜ், அந்த மருத்துவமனையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஆட்சியர் கிருதி ராஜ் தலையில் முக்காடு அணிந்து ஒரு நோயாளி போல் அந்த மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை சந்தித்துள்ளார். அப்போது, அந்த மருத்துவர், ஆட்சியர் கிருதி ராஜிடம் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஆட்சியர் கிருதி ராஜ், தான் யார் என்பதை தெரிவித்த பிறகு, அந்த மருத்துவமனையே ஆட்டம் கண்டுள்ளது. 

அதன் பின்னர், ஆட்சியர் கிருதி ராஜ் அந்த மருத்துவமனை முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டார். அந்த ஆய்வில், மருத்துவர்கள் முறையாக வருகை தராதது, நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாதது, காலாவதியான மருந்துகள் அளிக்கப்படுவது என பல குற்றங்கள் கண்டறியப்பட்டது. 

இது குறித்து ஆட்சியர் கிருதி ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நாய்க்கடிக்கு ஊசி போடுவதற்கு மருத்துவமனைக்கு  நோயாளி ஒருவர் சென்ற போது காலை 10 மணிக்குப் பிறகும் மருத்துவர் வரவில்லை என சுகாதார நிலையம் தொடர்பாக எனக்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில், நான் மறைந்திருந்து, முக்காடு போட்டுக் கொண்டு அங்கு சென்றேன். அப்போது மருத்துவரின் நடத்தை ஏற்புடையதாக இல்லை. மேலும், சிலர் மருத்துவமனைக்கு சரியாக வருகை தராதது தெரியவந்தது.

வருகை பதிவேட்டில் சிலரின் கையெழுத்து இருந்தாலும், சுகாதார நிலையத்தின் உள்ளே அவர்கள் இல்லை எனவும் தெரிந்தது. கையிருப்பில் உள்ள பெரும்பாலான மருந்துகள் காலாவதியாகிவிட்டன. சுகாதார மையத்தில் தூய்மையும் பராமரிக்கப்படவில்லை. இது குறித்து நாங்கள் மேலும் விசாரணை நடத்தவுள்ளோம்” என்று கூறினார்.