Advertisment

குறைந்த விலை துணியால் கரோனாவை மறந்த மக்கள்... அறிமுகக் கடையில் அடங்காத கூட்டம்!

Worth saree floor rate .... Crowd not included in the introductory shop!

போட்டியாளர்களை ஒதுக்கி வைக்கவும், புதிய கடையின் வியாபாரம் பொருட்டு வாடிக்கையாளர்களை வரவழைக்கவும் அறிமுகத்தின்போதே பல சலுகைகளை அறிவிப்பதுண்டு. அந்த ஃபார்முலா டெவலப்பாகி, விலை மதிப்புள்ள துணிகளைக்கூட தரை டிக்கெட் ரேட் என அதிரடியாக அறிவிக்கும் பாணி தற்போது பின்பற்றப்படுகிறது.

Advertisment

இப்போதைய தீபாவளிப் பண்டிகையை மனதில்கொண்டு வாடிக்கையாளர்களை வரவழைக்கவும், கஸ்டமர்களைக் கவரும் வகையில் ஒரு சேலை 50 ரூபாய் என கற்பனைக்கும் எட்டாத அளவில் நிஜமாகவே அறிவித்திருக்கிறது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நகரில் தனது புதிய கிளையை ஆரம்பிக்கும் ஜவுளி நிறுவனம் ஒன்று. இதனால் ஆலங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் பரபரப்பாகியிருக்கின்றன. சரஸ்வதி பூஜையான அக். 14 அன்று அந்த ஜவுளி கடையை வியாபார நிறுவனங்களின் முக்கியப் புள்ளி ஒருவர் திறந்துவைத்தார். அன்றைய தினம் மட்டும் சேலை ஒன்று 50 ரூபாய்விலையில் என ஜவுளி நிறுவனம் அறிவித்ததால், கடை முன்பாகக் காலை முதலே கட்டுக்கடங்காத கூட்டம் கூடி, கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கிறது.

Advertisment

Worth saree floor rate .... Crowd not included in the introductory shop!

இந்தத் தகவல் மாவட்ட ஆட்சியருக்கு எட்ட அவரது உத்தரவின் பேரில், கரோனா விதியை மீறியதாகவும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாத வகையில் நடந்துகொண்டதற்காகவும் சுகாதாரத்துறையின் வட்டார அதிகாரி கங்காதரன் ஜவுளிக்கடைக்கு பத்தாயிரம் அபராதம் தீட்டிவிட்டார்.

மிக சல்லிசான விலையில் சேலை வாங்கிக்கொண்டு திரும்பியவர்களோ, “சேலை ஒவ்வொன்றும் 300, 400, 500க்கும் மேற்பட்டது. இந்தச் சீப் ரேட்டில் கெடைசிருக்குய்யா. தீபாவளி நேரமாச்சே” என பூரிப்போடு சொன்னபடி திரும்பிக்கொண்டிருந்தார்கள்.

மக்கள் நலன் பொருட்டு இதுபோன்ற கவர்ச்சி ஆஃபர்களை அரசுதான் வகைப்படுத்த வேண்டும் என்கிறார்கள் சமூகநல ஆர்வலர்கள்.

textile shop Tenkasi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe