உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி பிட் இந்தியா என்கிற தலைப்பில் இந்தியா முழுவதும் ஜனவரி 18ந்தேதி நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், ஆதியூர் ஊராட்சி சார்பில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைக்க வந்தவர், தானும் ஒரு சைக்கிள் வாங்கி நிகழ்ச்சிக்கு வந்துயிருந்த இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களோடு இணைந்து சைக்கிள் ஓட்டினார்.

Advertisment

collector

மாவட்ட ஆட்சியர் சைக்கிளில் செல்வதை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் சேலம் ஆதியூர் கூட்டு சாலையில் திரண்டனர், ஆட்சியருடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர்.

Advertisment

உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும்மே மனம் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் தினமும் உடற்பயிச்சி செய்ய வேண்டும். அப்படி உடற்பயிற்சி செய்வதன் மூலமாக உடல் வலிமை பெறும். இதன் மூலம் எந்த நோயும் நம்மை அண்டாது என மக்களிடம் எடுத்துரைத்தார்.