Skip to main content

“மார்க் கம்மிக்கே இப்டியா.. ஃபெயில் ஆகிட்டே ஜாலியா இருக்கோம்” - மாணவனுக்கு கலெக்டர் அட்வைஸ்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

Collector comforts student with low marks in hospital

 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பல்லடம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக மருத்துவமனையில் மருத்துவர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருந்தன. மருத்துவமனையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்கிருந்த நோயாளிகளிடம் சிகிச்சை ஒழுங்காக அளிக்கப்படுகிறதா என்பது குறித்து கேள்விகளை எழுப்பினார்.

 

அங்கு 10 ஆம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் தற்கொலைக்கு முயன்ற அனீஸ் என்ற சிறுவனை கண்டுள்ளார். மாணவர் குறித்து அவரது அருகில் இருந்தவர்கள் எடுத்துரைத்தனர். உடனடியாக மாணவரின் அருகில் சென்ற அவர், மாணவரிடம் நலம் விசாரித்துள்ளார். இதன் பின், “நாங்கள் 10, 12, கல்லூரிகளில் அரியர் எல்லாம் வைத்துள்ளோம். அதற்கு என்ன செய்வது. இப்போது நல்ல வேலையில் தான் இருக்கிறேன். உங்கள் ஊர் கலெக்டராக போட்டுள்ளார்கள்.

 

பாஸ், பெயில் என்பதெல்லாம் கிடையாது. இதற்கு பின் எப்படி இருக்கிறோம் என்பது தானே முக்கியம். எல்லாம் டெஸ்ட் தானே நமக்கு. ஜாலியாக இருக்க வேண்டும். மார்க் குறைந்ததற்கு தான் இந்த முடிவா? நாங்க எல்லாம் ஃபெயில் ஆகிவிட்டே ஜாலியாக இருக்கிறோம். உனக்கு என்ன பிரிவு வேண்டுமோ அதைப் படி. இங்கு விட்டதை 12 ஆம் வகுப்பில் பிடி. இதுக்கெல்லாம் வருத்தப்படக் கூடாது. 12 ஆம் வகுப்பு வந்த உடன் நீயே எனக்கு போன் செய்து சொல்ல வேண்டும்” என ஆறுதல் கூறிவிட்டு சென்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

புதுக்கோட்டை மாவட்டத்தின் 43வது ஆட்சியராகப் பொறுப்பேற்றார் அருணா ஐ.ஏ.எஸ்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Aruna IAS took charge as the 43rd Collector of Pudukkottai District

தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கடந்த 16 ஆம் தேதி (16.07.2024) உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த மெர்சி ரம்யா மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக அருணா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் 1974 இல் உருவாக்கப்பட்டு தற்போது 51வது ஆண்டில் உள்ளது. மாவட்டத்தின் முதல் ஆட்சித் தலைவராக சி.ராமதாஸ் ஐ.ஏ.எஸ் 1974 ஜனவரி 14 இல் பதவி ஏற்று 3 மாதங்கள் பணியில் இருந்துள்ளார். தொடர்ந்து இதுவரை 42 மாவட்ட ஆட்சியர்கள் பணியில் இருந்துள்ளனர். தற்போது 43 வது மாவட்ட ஆட்சியராக அருணா ஐஏஎஸ் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

கடந்த 5 ஆண்டுகளில் உமாமகேஸ்வரி, கவிதா ராமு, மெர்சி ரம்யா என 3 பெண் மாவட்ட ஆட்சியர்களே பணியாற்றி வந்த நிலையில் தற்போது தொடர்ந்து 4 வது பெண் மாவட்ட ஆட்சியராக அருணா ஐ.ஏ.எஸ் பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

நெருங்கி வரும் விநாயகர் சதுர்த்தி - மனுகொடுத்த களிமண் மண்பாண்ட சங்கத்தினர்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 'Plaster of Paris Ganesha idols should be banned'- clay potters petition

விநாயகர் சதுர்த்தி நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பதற்கான பணிகள் தற்போது துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு முடிவடைந்து சிலைகளுக்கு வண்ணம் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சில ஆண்டுகளாகவே இரசாயனம் கலந்த பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்  உள்ளிட்ட பொருட்கள் மூலம் விநாயகர் சிலைகளை தயாரிக்க அரசு தடை விதித்ததோடு, விநாயகர் சிலை தயாரிப்பதற்கான பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு வெளியிட்டு இருந்தது. அதன்படி பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட சிலைகள் உள்ள இடங்கள் மற்றும் குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து குடோன்களை மூடிய சம்பவங்களும் நிகழ்த்திருந்தது.

இந்நிலையில் வடமாநிலத்தவர் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் சிலை தயாரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என சேலத்தில் களிமண் மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

குலாலர் மண்பாண்டம், களிமண் பேப்பர் கூழ் விநாயகர் சிலை பொம்மைகள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைகளுடன் மனு அளித்தனர். மேலும் சிலை தயாரிப்பதற்கான கட்டுப்பாடுகளை விரைவாக அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.