‘கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை’  - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Collector announcement Holiday for schools in Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனையொட்டி வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டானா புயல், வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது இது ஒடிசாவின் தென்கிழக்கே நிலைகொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த புயல் ஒடிசா அருகே நாளை (25.10.2024) காலை கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (25.10.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார்.

holiday Kanyakumari schools
இதையும் படியுங்கள்
Subscribe