மகன்கள் கைவிட்டதால் தவித்த உசிலம்பட்டியை சேர்ந்த மூதாட்டி முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். மகன்களை விசாரிக்க தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

la

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி சிம்பு செட்டித் தெருவை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள். இவரது கணவர் முத்தையா பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மூத்த மகன் பாஸ்கரன் திருமணமாகி மதுரையிலும் குடியிருந்து வருகிறார். இளைய மகன் பாண்டி சென்னையில் வசித்து வருகிறார்.

Advertisment

p

Advertisment

இந்த நிலையில் லட்சுமி அம்மாள் அரசு முதியோர் உதவித் தொகையில் வீட்டு வாடகை கொடுத்து வசித்து வந்தார். ஓராண்டுக்கு முன் ஆண்டிபட்டியில் வசித்த மகளின் இழப்புக்கு வந்த லட்சுமி அம்மாள் அங்கேயே தங்கினார். மகளின் வீடு விற்கப்பட்டதால் வீட்டை காலி செய்தவர் முதியோர் உதவித் தொகையும் நிறுத்தப்பட்டது. மகன்களும் தாயை கைவிட்டனர் . ஆண்டிபட்டியைச் சேர்ந்த கண்ணகி தேவிகா ஆகியோர் 10 மாதங்களாக உணவு உடை தங்கவும் வசூல் செய்து கொடுத்து லட்சுமி அம்மாளை பராமரித்து வந்தனர். அவரின் மகன்களிடம் அப்பகுதியினர் பலமுறை தொலைபேசியில் பேசி அழைத்துச் செல்லக் கூறினார்கள். ஆனால் லட்சுமி அம்மாளின் மகன்கள் அவருடைய தாயாரை பராமரிக்க இயலாது என கூறி தொடர்ந்து போன் எண்ணையும் துண்டித்து விட்டனர்.

இந்த நிலையில்தான் கண்ணகியும் தேவிகாவும் லட்சுமி அம்மாளை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து கலெக்டர் பல்லவி பல்தேவ் இடம் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் என்னை மகன்கள் உடன் வைத்துக் கொள்ளாமல் தனிமையில் விட்டு விட்டனர். உறவுகள் இல்லை. அதனால் முதியோர் இல்லத்தில் சேர்க்க உதவ வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் லட்சுமி அம்மாளை தேனி மாவட்டத்தில் உள்ள கொடுவிளார்பட்டி முதியோர் காப்பகத்தில் சேர்க்க மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அதிரடி உத்தரவிட்டார் . அதை தொடர்ந்து லட்சுமி அம்மாளின் மகன்கள் இருவரையும் வரவழைத்து விசாரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் உசிலம்பட்டி தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.