கள்ளக்குறிச்சி தாங்கல் ரோட்டில் வசிக்கும் மேகலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் ராஜா ,ராஜேந்திரன் என்பவரின்மகன் வேலுமணி. இருவரும் அந்த மாணவியை கல்லூரிக்கு செல்லும் வழியில் வழிமறித்து அடிக்கடி பாலியல் துன்புறுத்தல் கொடுத்துத்தள்ளனர். இதனை பொறுக்கமுடியாத அவர்ஒரு கட்டத்தில் தனது தாயாரிடம் கூறியுள்ளார்.

Advertisment

Sexual abuse

சம்பந்தப்பட்டவர்களானராஜா, வேலுமணிமீது பெண்ணின் தாயார்கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் விசாரணை செய்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது உண்மை என அறிந்து அவர்களை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். இதுமட்டுமல்லாமல் கள்ளக்குறிச்சி டவுன் அருகிலுள்ள குள்ளக்கருப்பன் கோவில்என்ற இடம் உள்ளது.இந்த கோவில் கரும்பு தோட்டத்தின் மறைவு பகுதியில் உள்ளது. அதை பயன்படுத்தி பள்ளி, கல்லூரி காதல் ஜோடிகள், கள்ளகாதல் ஜோடிகள்ரகசியமாகசந்திக்கும் இடமாக இருந்துள்ளது அந்தஇடம். அவ்வப்போது அந்த பகுதியை சுற்றி உள்ள நிலத்தின் சொந்தக்காரர்கள் இவர்களது தொல்லை தாங்க முடியாமல் துரத்தி விடுவதும் வழக்கம்.

அப்படி அங்கு வரும் காதல் ஜோடிகளை மேற்படி ராஜா அவனது நண்பர்கள் சேர்ந்துகொண்டு காதலர்களை துரத்திவிட்டு அந்த பெண்களைபாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இது சம்பந்தமாகவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment

Sexual abuse

இந்த நிலையில் இதேபோல்நேற்று முந்தினம் கண்டமங்கலம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட விநாயகபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 17 வயது மகள், அப்பகுதியில் உள்ள மில்லுக்கு வேலைக்கு சென்றிருந்தார். அங்கு ஒருவருடன் ஏற்பட்ட காதல் 6 மாதமாக தொடர, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். அதன்படி நேற்று முன்தினம் பள்ளிமேவியனூர் ரயில்வே கேட் அருகே இரவு 9 மணி அளவில் ரகசியமாக சந்தித்துள்ளனர். அந்தவழியே வந்த பள்ளிச்சேரியை சேர்ந்த 4 இளைஞர்கள் காதலர்களை சுற்றிவளைத்து காதலனைதாக்கி அவனது கண் முன்னேயே அந்த பெண்ணை பாலியல் கூட்டுபலாத்காரம் செய்தனர். உடனே காதலன் அவனது நண்பர்களுக்கு போன் செய்து அழைக்க, வந்த நண்பனையையும் அடித்துவிட்டு சென்றுவிட்டனர். பாதிக்கபட்ட காதலன், காதலி கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து அந்த 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.