Collecting votes on a walk; M.K.Stalin who took the field in Salem

Advertisment

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் தூத்துக்குடியில் மார்க்கெட் பகுதியில் காலை நேர நடைப்பயிற்சியின் போது மக்களிடம் வாக்கு சேகரித்த நிலையில், தற்போது சேலம் சென்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சேலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் செல்வ கணபதியைஆதரித்து வாக்கு சேகரித்தார். காலை வேளையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட தமிழக முதல்வர் சேலம் அக்ரஹாரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.