Skip to main content

உயிரிழப்புகளின் எதிரொலி! ‘Coldbest PC’ இருமல் மருந்துக்கு தடை!

Published on 21/02/2020 | Edited on 21/02/2020
c

 

Coldbest -PC இது ஒரு இருமல் சிரப் மருந்து.  இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் நச்சுப்பொருள் இந்த மருந்தில் உள்ளதால் தடை செய்யப்பட்டு இருக்கிறது.


இந்த மருந்தை இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த டிஜிட்டல் விஷன் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம்  தயாரிக்கிறது.  இந்த மருந்தில் உள்ள Diethylene Glycol என்ற நச்சுப்பொருள், ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் 9 சிறார்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது.  ஆகவே, அதுகுறித்த ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.

 

இதையடுத்து, ஜம்மு-கஷ்மீர் மருந்து கட்டுப்பாட்டு துறை அனுப்பிய சுற்றறிக்கை, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்திற்கு கிடைக்கப்பெற்று, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் மூலம், தமிழகத்தில் உள்ள அனைத்து இணை இயக்குனர்களுக்கும், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்திற்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதனால்,  இந்த மருந்தை  வாங்கவோ, விற்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த மருந்து பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


              

சார்ந்த செய்திகள்