Coimbatore two noth indian women passes away

Advertisment

கோவை கவுண்டம்பாளையம் ஐ.டி.ஐஅருகே, கடந்த 2ஆம் தேதி காலை 11 மணியளவில் பேருந்து நிறுத்தத்தில், மாநகரப் பேருந்து நின்று கொண்டு இருந்தது. அப்போது கற்கள் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வேகமாக வந்தது. அப்போது இளைஞர் ஒருவர் இரு பெண்களுடன் பேருந்தைக்கடக்க முயன்றார்.

அதே வேளையில், அந்த மினி லாரி பேருந்தைக் கடந்தது. அப்போது பேருந்து, லாரி ஆகிய இரு வாகனங்களுக்கும் இடையில், சிக்கிய இளைஞர் தடுமாறிவிழுந்தார். இரு இளம்பெண்கள் மீதும் கண் இமைக்கும் நேரத்தில் லாரி ஏறி இறங்கியது.

இதில் இளைஞர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார். இரு இளம்பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த இரு பெண்களும் வடமாநிலத்தைச் சேர்ந்த சோனாலி முண்டா மற்றும் லட்சுமி ராணி மகோட்டா என்பதும், இவர்கள் தனியார் கம்பெனியில் டெய்லரிங் வேலை செய்துவருவதும் தெரியவந்தது.

Advertisment

இந்த விபத்து ஏற்பட்ட போது அப்பகுதியில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி காட்சிகள் மனதை ரணப்படுத்துகிறது.