Published on 18/10/2020 | Edited on 18/10/2020

கடும் பனிமூட்டம் காரணமாக தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கந்திலி பகுதியில் திடீரென தரையிறக்கப்பட்டது.
இரண்டு பைலட், பயணிகள் உட்பட ஏழு பேருடன் கோவை மாவட்டத்திலிருந்து ஆந்திர மாநிலம், திருப்பதிக்கு புறப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மோசமான வானிலை மற்றும் கடுமையான பனிமூட்டம் காரணமாக, திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி என்ற பகுதியில் பைலட்டுகள் ஹெலிகாப்டரை பத்திரமாக தரையிறக்கின. இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் ஹெலிகாப்ட்டரை காண குவிந்தனர்.
இதனிடையே பைலட்டுகள் கூறுகையில், 'வானிலை சரியானதும் மீண்டும் திருப்பதிக்கு பயணம் மேற்கொள்வோம்' என்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்றிரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.