கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த பெர்னார்ட்க்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.திருப்பூரில் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிற பெர்னார்ட் கோவைக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் வந்துள்ளார்.

Advertisment

ccc

இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்,தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளது.குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கும் பெர்னார்ட்க்கு குடிப்பதற்கு மது கிடைக்கவில்லை.அதனால் கடந்த இரண்டு நாட்களாக தன் கைவசம் இருந்த சானிடைசரை குடித்துள்ளார்.

உணவு ஏதும் உண்ணாமல் தொடர்ந்து சானிடைசரை மட்டுமே போதைக்காக குடித்து வந்துள்ளார் பெர்னார்ட்.இந்த நிலையில் நள்ளிரவு நெஞ்சு அடைக்கிறதென்று பதறிய அவரை இன்று அதிகாலை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Advertisment

ஆனால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சில நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.