Advertisment

கதறி அழுத ஊர் மக்கள்... கோவை மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Coimbatore student's handed over to parents!

Advertisment

கோவையில் சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டார்.

Coimbatore student's handed over to parents!

முன்னதாக மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தேடப்பட்டு வந்த அவரை பெங்களூரில் வைத்து போலீசார் கைது செய்தனர். கோரிக்கையின்படி பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டதால் மாணவியின் உடலை வாங்க பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதேபோல் மாணவியின் வீட்டின் முன்பு மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டங்கள் திரும்பப்பெறப்பட்டது.

Advertisment

Coimbatore student's handed over to parents!

கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட மீரா ஜாக்சனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Coimbatore student's handed over to parents!

பாலியல் துன்புறுத்தல் செய்த புகாரில் பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டுள்ளதால் இன்று மாணவியின் பெற்றோர் உடலைப் பெற்றுக் கொண்டனர். தற்பொழுது மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கண்ணீருடன் கதறி அழுதபடி அப்பகுதி மக்கள் மாணவியின் உடலைப் பெற்றுக்கொண்டனர்.

Investigation police schools kovai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe