Coimbatore student case; The secret told by the police!

10/2021 - கோவை தனியார் பள்ளி மாணவியின் தற்கொலை வழக்கு எண் இது.

பாலியல் தொல்லை, தற்கொலைக்குத் தூண்டுதல், போக்ஸோ ஆகிய சட்டப் பிரிவுகளின்கீழ் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மினி ஜாக்சன் என்கிற மீரா ஜாக்சன்இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களைக் கஸ்டடி எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருக்கின்றனர்.

Advertisment

இந்நிலையில், நாம் ஏற்கனவே சந்தேகத்துடன் குறிப்பிட்டிருந்த, பத்திரிகை, மீடியாக்களிடம் ‘என் நண்பியை இழந்துவிட்டேன்' என்றும் அழுது புலம்பிய மாணவியின் நண்பன் வைஷ்ணவை தூக்கிக்கொண்டு போயிருக்கிறது போலீஸ். "அவனிடம் விசாரித்ததில் நிறைய உண்மைகள் வந்துள்ளன” என்ற மகளிர் போலீஸ் ஒருவர், மேலும் சில விவரங்களையும் தெரிவித்தார்.

Advertisment

"மிதுன் தவறாக நடந்துகொண்டதைப் பற்றித் தன்னிடம் அவள் சொன்னதாக, எங்களிடம் சொன்னான் வைஷ்ணவ். எங்களுக்கு அப்பவே இடித்தது. ஒரு பெண், தனக்கு நடந்ததை சக தோழியிடம் சொல்லாமல் ஒரு ஆணிடம் சொல்வாளா? அப்படியே சொன்னாலும் வைஷ்ணவுக்கும், அந்த மாணவிக்கும் என்ன நட்பு இருந்தது? என சந்தேகம் வந்தது. ‘என் நண்பியை இழந்துவிட்டேன்' என மீடியாக்கள், பத்திரிகைகள் முன் அவன் அழுததில் சந்தேகம் கொண்டே அவனைத் தூக்கிவந்தோம்.

‘நான் அந்த மாணவியை விரும்பினேன். அவளும் என்னை விரும்பினாள். ஆங்காங்கே சுற்றிவந்தோம். இந்நிலையில்தான் மிதுன் மாஸ்டர் தவறாக நடந்துகொண்டார் என்பதை அவளது தோழி மூலம் அறிந்துகொண்டேன்; கடுங்கோபமானேன். அதற்குள் அவளிடம் மிதுன் எல்லை மீறிவிட்டதாக அவள் தோழி மூலமே அறிந்துகொண்டு கொதிக்க ஆரம்பித்துவிட்டேன். அவளுக்கு ஃபோன்செய்து,மிதுன் உன்னிடம் தவறாக நடந்துகொண்டார்தானே..? இதை உன் பேரண்ட்ஸிடம் சொல்லியே ஆவேன்? என்றேன். ஓ.. என அழ ஆரம்பித்துவிட்டாள்.

Advertisment

ஒருபக்கம் மிதுனின் டார்ச்சரால் அழுதுகொண்டிருந்தாள். அந்த சமயம், நான் ‘பேரண்ட்ஸிடம் சொல்லுவேன்' என மிரட்டிக்கொண்டிருந்தேன். இந்த நெருக்கடிகளைத் தாங்கிக்கொள்ளாமல்தான் அவள் தூக்கிட்டுக்கொண்டாள் என்றான்.’ அவனையும் இந்த வழக்கில் கைது செய்து முக்கியக் குற்றவாளியாய் சேர்க்கவிருக்கிறோம்'' என்கிறார்கள் மகளிர் போலீசார்.

தற்கொலை செய்துகொண்ட மாணவிக்குப் பள்ளிக்கூட நிர்வாகமே, பெற்றோர்களுக்குத் தெரியாமல் உளவியல் மருத்துவர் மூலம் ஆலோசனை வழங்கியிருக்கிறது. யார் அந்த மருத்துவர்? என நாம் துருவியபோது, மகளிர் போலீஸ் தரப்பிலிருந்தே சில விவரங்கள் கிடைத்தன.

"ஆமாம்... ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர்தான் பள்ளிக்கூடத்திற்கே சென்று ஆலோசனை அளித்திருக்கிறார். பள்ளி நிர்வாகம் சொல்லிக்கொடுத்த சமாளிப்பு வார்த்தைகளையே அந்த மருத்துவர் உளவியல் ஆலோசனை என்ற பெயரில் மாணவிக்கு வழங்கியிருக்கிறார். அந்தப் பெண் மருத்துவர் இப்போது தலைமறைவாகியிருக்கிறார். அவரைப் பிடிக்கவும் முயற்சி எடுத்துவருகிறோம்”என்கிறார்கள் மகளிர் போலீசார்.

மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட இரண்டு பேர் யார்?வேறு யாரேனும் தற்கொலைக்குத் தூண்டினார்களா? தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? உள்ளிட்டவை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், மாணவியின் வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர், மாணவியின் நோட்டு புத்தகங்களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் வீட்டிலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

எல்லாம் வேகமாகத்தான் நடக்கிறது. அந்த மாணவியின் தற்கொலைக்கு நீதியும், அதற்கு காரணமானவர்களுக்குத் தண்டனையும் விரைவாக கிடைக்குமா?