Published on 17/11/2021 | Edited on 17/11/2021

கோவையில் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், பெற்றோர்கள், உறவினர்கள், மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் போராட்டத்தின் காரணமாக மூன்று நாட்களுக்குப் பிறகு தனிப்படை போலீசார் கடந்த 14.11.2021 அன்று இரவு பெங்களூருவில் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துவரப்பட்டு, அவரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, பின்னர் சிறையிலடைத்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர்கள் 4 நாட்கள் பணிபுறக்கணிப்பில் உள்ளதால் பள்ளி முதல்வரின் ஜாமீன் மனு வரும் நவ. 22ஆம் தேதி போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.