Advertisment

கோவை மாணவி தற்கொலை விவகாரம்: நினைவு ஃபிளக்ஸ் வைத்த மூவர் மீது வழக்கு! 

Coimbatore student case; Case against the three who kept the memory  banner

Advertisment

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி கடந்த வியாழக்கிழமை (11.11.2021) தற்கொலை செய்துகொண்டார். பாலியல் துன்புறுத்தல் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகள் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஃபிளக்ஸ் போர்டு வைத்ததாக கௌதம் என்பவர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல், உக்கடம் பெருமாள் கோவில் வீதி பகுதியிலும், ஈஸ்வரன் கோவில் வீதி பகுதியிலும் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு ஃபிளக்ஸ் போர்டு வைத்ததாக தமிழ்நாடு ஆரிய வைசியர் சங்கம் மீது உக்கடம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

போக்சோசட்டத்தின்படி பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளங்களைப் பொதுவெளியில் வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றம். அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

police Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe