Coimbatore student affair; School principal Mira Jackson's investigation is over!

கோவையில் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், பெற்றோர்கள், உறவினர்கள், மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் போராட்டத்தின் காரணமாக மூன்று நாட்களுக்குப் பிறகு தனிப்படை போலீசார் நேற்று (14.11.2021) இரவு பெங்களூருவில் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்தனர்.

Advertisment

அதைத் தொடர்ந்து, கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துவரப்பட்டு, அவரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில், முதற்கட்ட விசாரணையை துணை ஆணையர் ஜெயச்சந்திரன் முடித்துக்கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்வதற்காக மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டது. காவல்துறை உதவி ஆணையர் தலைமையில் மூன்று குழுக்களும் வெவ்வேறு பகுதிகளில் பள்ளி முதல்வரை தேடிவந்தனர். இந்நிலையில், பள்ளி முதல்வர் போக்சோ சட்டத்தின் கீழ் தற்போது கைது செய்யப்பட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. விசாரணை முடிந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்” என்றார்.

Advertisment

இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.