
பண்ருட்டி ராமசந்திரன் குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி கிடையாது என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் செல்வராஜ், ''பண்ருட்டி ராமசந்திரன் குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமல்ல அவரோடு இருக்கும் யாருக்கும் தகுதி கிடையாது. அவர் அதிமுகவில் பணியாற்றிக்கொண்டிருந்த பொழுது இவர்களெல்லாம் ஆப் டவுசர் போட்டு கொண்டு விளையாடிகொண்டிருந்திருப்பார்கள். இவர்களுக்கு அரசியலே தெரியாது. அவர் செய்யும் அரசியல் என்ன இவர்கள் செய்யும் அரசியல் என்ன. அவர் எம்ஜிஆரோடு அரசியல் செய்தவர். அறிஞர் அண்ணா பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதை பார்த்து, 'முகத்தை காட்டினால் எம்ஜி.ராமச்சந்திரனுக்கு ஓட்டு, பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினால் மக்களின் ஓட்டு' என்று சொல்லி அன்னைக்கே இவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.திமுகவில் 26 வயதில் எம்.எல்.ஏ ஆனார் 1967ல். அப்படிப்பட்ட இவரை பற்றி பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)