
சமீப காலமாகவே பள்ளிகளில் மாணவிகளுக்கு நிகழும் பாலியல் தொல்லைகள் குறித்த செய்திகள், கைது நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது. அண்மையில் கோவையில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், கரூர், சென்னை உள்ளிட்ட இடங்களிலும் இதே போன்ற நிகழ்வுகள் நடைபெற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் கோவையில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கோவை வெள்ளலூர் அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பள்ளி மாணவிகள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கணித ஆசிரியர் விஜயானந்த்தை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.