கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் லதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவருக்கு திருமணம் ஆகி சில மாதங்கள் சென்னை பழைய பல்லாவரத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது லதாவிற்கும் பக்கத்து வீட்டில் வசித்து வந்த டாக்சி ஓட்டுநர் ராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

driver

இருவரும் ஒன்றாக இருப்பது போல் பல புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு லதாவை ராஜா வற்புறுத்தி வந்துள்ளார்.இதனை தொடர்ந்து, ராஜாவின் தொல்லை தாங்க முடியாமல் லதா கோவைக்கே திரும்பி வந்து விட்டார்.

லதாவின் முகவரியை தெரிந்து கொண்ட ராஜா, கோவைக்கு வந்து மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியதோடு, திருமணத்திற்கு சம்மதிக்காவிட்டால் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, அந்த படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து லதா இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.புகாரினை தொடர்ந்து ராஜா மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.