coimbatore

கோவை மதுக்கரை மார்க்கெட் வி.ஓ.சி. வீதியைச் சேர்ந்தவர் கணேசன். கார்பெண்டராக வேலை செய்து வந்தார்.இவரது மருமகன் அரிசிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன். இவரும் கணேசனுடன் கார்பெண்டர் வேலை செய்து வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் கணேசன் விக்னேஸ்வரனுக்கு சம்பள பாக்கி வைத்திருக்கிறார்.இது தொடர்பாக விக்னேஸ்வரன் அடிக்கடி கணேசனிடம் கேட்டுக்கொண்டே இருந்தார். இந்த நிலையில்தான் கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் கணேசன் வீட்டிற்கு போன விக்னேஸ்வரன் சம்பள பாக்கியை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பணம் தராததால் அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து சரமாரியாக கணேசனை தாக்கியதாக கூறப்படுகிறது.

Advertisment

இதைத்தொடர்ந்து படுகாயமடைந்த கணேசனை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கணேசனின் மனைவி குமாரி மதுக்கரை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மருமகன் விக்னேஸ்வரன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.