கோவை எம் ஜி ஆர் மார்க்கெட்டில் சுமை தூக்கும் கூலி தொழிலாளி கண்ணன் என்கிற பால மணிகண்டன்(43). இவருக்கு கவிதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். திண்டுக்கல்லை சேர்ந்த இவர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார்

Advertisment

நேற்று பிற்பகல் 02.00 மணிக்கு கவுண்டர் மில் பகுதியில் மூன்று நம்பர் லாட்டரி வாங்கியதாக துடியலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு காவல்நிலையத்தில் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து உடனடியாக துடியலூர் பகுதியிலுள்ள லக்ஷ்மி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் காவல்துறையினர்.

coimbatore police station for investigation manikandan incident

அங்கு உடல்நிலை மிக மோசமானதால் உடனடியாக குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தற்போது அவர் உயிரிழந்துள்ளார். காவல்துறையினரின் அலட்சியத்தின் காரணமாகவே கண்ணன் உயிரிழந்ததாக அவரது மனைவி கவிதா குற்றம் சாட்டிள்ளார்.