Advertisment

குடிபோதையில் இளம்பெண்ணை துரத்திச் சென்ற​ காவலர்... சுற்றி வளைத்த பொதுமக்கள்! 

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வன்னியன் கோவில் பகுதியில் லேத் வொர்க் ஷாப் நடத்தி வருபவர் ரவிக்குமார் (38), அவரது மனைவி சரண்யா (35). சரண்யா இன்று (செப் 11) மதியம் கீரணத்தம் பகுதியில் உள்ள தனது உறவினர்களை பார்க்க சென்று கொண்டிருந்தார். அப்போது அத்திப்பாளையம் அடுத்துள்ள டாஸ்மாக் கடையை கடந்து சென்ற போது, அதே பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த காவலர் ஒருவர் சீருடையில் சரண்யாவின் ஸ்கூட்டரை துரத்தி சென்றார். பின் தொடர்ந்து வருவதை கண்டு பயந்த சரண்யா தனது ஸ்கூட்டரை வேகமாக இயக்கியுள்ளார். அப்போது அவரை முந்திச் சென்ற பிரபாகரன் என்ற காவலர், சரண்யாவை வழிமறித்து எங்கே செல்கிறீர்கள் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று ஆபாசமாக பேசியுள்ளார்.

Advertisment

COIMBATORE POLICE PRABAKARAN ILEGAL ACTIVITIES KOVIL PALAYAM POLICE STATION

இதற்கு சரண்யா தான் கீரணத்தம் செல்வதாகவும், அங்கு உறவினர்களை பார்க்க சென்று கொண்டிருப்பதாகவும் காவலரிடம் கூறி சென்ற, அவரை பிரபாகரன் தொடர்ந்து பின்தொடர்ந்து உள்ளார். இதனால் பீதியடைந்த சரண்யா, அத்திப்பாளையம் பகுதியிலுள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் தஞ்சம் அடைந்தார். அங்கும் சென்று தகாத வார்த்தையில் காவலர் பிரபாகரன் பேசியுள்ளார். இதனையடுத்து சரண்யா தன் கணவர் ரவிக்குமாருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். இதனையடுத்து பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்த ரவிக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அத்திப்பாளையம் பேன்சி ஸ்டோருக்கு வந்தனர்.

பின்பு அவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து பிரபாகரனை சுற்றி வளைத்து எச்சரித்தனர். அப்போது காவலர் பிரபாகரன் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. மேலும் காவலர் பிரபாகரன் தனது இருசக்கர வாகனத்தில் சாராயத்தை வைத்திருந்ததை கண்ட பொதுமக்கள் ஆவேசமடைந்து சீருடையில் இருப்பதால் அடிக்காமல் விடுகிறோம் என்று கூறி கோவில்பாளையம் காவல்நிலையத்திடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ilegal activities POLICE PERSON Coimbatore Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe