Advertisment

தேசிய விருது; இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழக கிராமம்!

coimbatore pichanur village won national panchayat award

நாடு முழுவதும் சிறப்பாகச்செயல்படும் கிராம பஞ்சாயத்துகளை அங்கீகரித்து அவற்றை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு ஆண்டுதோறும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளின்அடிப்படையில் தேசிய கிராம பஞ்சாயத்து விருதுகள் வழங்கப்படுகின்றன.

Advertisment

இந்நிலையில் டெல்லியில் நேற்று 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய கிராம பஞ்சாயத்து விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாகச் செயல்பட்ட கிராம ஊராட்சித்தலைவர்களுக்கு விருதுகளை வழங்கி தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Advertisment

இதில் கோயம்புத்தூர் மாவட்டம் பிச்சனூர் ஊராட்சி, சிறந்த நிர்வாகத் திறன் பிரிவில் முதலிடம் பிடித்தது. இதற்கான விருதை குடியரசுத்தலைவரிடம் இருந்து பிச்சனூர் ஊராட்சி செயலாளர் உமா மகேஸ்வரி பெற்றுக்கொண்டார். தமிழகத்தில்இருந்து இந்த ஆண்டுக்கான தேசிய கிராம பஞ்சாயத்து விருதுக்குத்தேர்வு செய்யப்பட்ட ஒரே கிராம ஊராட்சி பிச்சனூர் என்பது குறிப்பிடத்தக்கது.

Coimbatore covai panchayat village
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe