Advertisment

கோவை பெரியார் சிலையை அவமதித்த குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்

Coimbatore periyar statue case two arrested under Gundoss

கோவை வெள்ளலூர் அருகே கடந்த 8ஆம் தேதி தந்தை பெரியார் சிலை மீது 2 மர்ம நபர்கள் அவமதிப்பு செய்திருந்தனர். இதுகுறித்து கோவை மாநகரக் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தபோது, பெரியார் சிலையை அவமதிப்பு செய்தது வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த அருண் கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் ஆகியோர் எனத் தெரியவந்தது.

Advertisment

Coimbatore periyar statue case two arrested under Gundoss

கடந்த 11ஆம் தேதி இருவரையும் போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்த நிலையில், இந்த இரு நபர்கள் செய்த குற்றச் செயல்களால் ஏற்பட்ட பொது ஒழுங்கு பிரச்சனையைக் கருத்தில் கொண்டு, இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கான ஆணையை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் பிறப்பித்துள்ளார். சிறையில் உள்ள மோகன்ராஜ் மற்றும் கார்த்திக் இருவருக்கும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது குறித்தான உத்தரவு நகல் கொடுக்கப்பட்டது.

Advertisment

periyar Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe