
கோவை சுந்தராபுரம் பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட பெரியார் சிலை உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெரியார் சிலை மீது காவிச் சாயத்தை ஊற்றி அவமதித்துள்ளனர். இதனைஇன்று காலையில் பார்த்த அப்பகுதி மக்கள் போத்தனூர் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதைக் குறித்து தகவலறிந்த திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலை முன்பு திரண்டனர். பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முழக்கங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து தண்ணீர் ஊற்றி சிலை சுத்தம் செய்யப்பட்டது. அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருவதால் பெரியார் சிலை முன்பு காவல் துறையினர் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போத்தனூர் காவல் துறையினர், சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)