கோவை மாவட்டம் காந்திபுரம் பிரதான சாலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் கடந்த 3 நாட்களாக தொடர் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

Advertisment

இந்த ஆர்ப்பாட்டத்தில் நேற்று (04/03/2020) கலந்துகொண்ட இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் போத்தனூரைச் சேர்ந்த மதுக்கரை ஆனந்த் (32) என்பவர், நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு நஞ்சுண்டாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

Advertisment

coimbatore party leader incident admit hospital police investigation

அங்குள்ள பாலம் அருகே வந்த போது, பின்னால் வந்த மர்மநபர்கள் ஆனந்தின் தலைப்பகுதியில் இரும்புக் கம்பியால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், மேல் சிகிச்சைக்காக பி.எஸ்.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

coimbatore party leader incident admit hospital police investigation

இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி அமைப்பைச்சேர்ந்தவர்கள் பி.எஸ்.ஜி மருத்துவமனையில் திரண்டனர். இதனால் மாநகரக்காவல்துறையினர் அதிகளவில் மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்து முன்னணி பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவத்தால் கோவை மாவட்டம் முழுவதும் பதற்றம் நீடிக்கும் நிலையில், முக்கிய இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.