/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/coimbatore 33.jpg)
கோவை பனைமரத்தூரில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பனைமரத்தூர் மாரியம்மன் கோவிலில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து செல்வபுரம் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் சென்றது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்தப் பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் தர்மபுரியைச் சேர்ந்த ரமேஷ் என தெரிய வந்தது. ரைஸா என்ற திருநங்கையுடன் ரமேஷ் பழகி வந்துள்ளார். மஞ்சு என்ற இன்னொரு திருநங்கையுடனும் பழகியதால் ரமேஷ் மற்றும் ரைஸாவுக்கும் அவ்வப்போது சண்டை நடந்துள்ளது.
இந்தநிலையில் கோபமான ரைஸா, ரமேஷை வரவழைத்து பேசியிருக்கிறார். ரமேஷ் கடைசியாக ரைஸாவிடம்தான் பேசியிருக்கிறார் என போலீசாரிடம் சிலர் தகவல்களை சொல்லியிருக்கிறார்கள். போலீசார், ரைஸா மற்றும் மஞ்சு ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us